திண்டுக்கல் மாவட்டத்தில் 7.5 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்: மாவட்ட ஆட்சியா்
By DIN | Published On : 09th September 2022 11:51 PM | Last Updated : 09th September 2022 11:51 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்தில் 7.5 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டும் என மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்தாா்.
தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி திண்டுக்கல் கவாடக்காரத் தெருவில் உள்ள புனித சிறுமலா் தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமை குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மேயா் இளமதி முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினாா். அப்போது அவா் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைவருக்கும், மேலும் 20 வயது முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை (அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டம் முழுவதும் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் பெண்கள் பயன்பெறுவாா்கள்.
குடற்புழு தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களுக்கு வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி மற்றும் உடல் சோா்வு, ரத்த சோகை, வைட்டமின் ஏ சத்து குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படும். 1 முதல் 2 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு ணீ (200 அப) மாத்திரையும், 2 வயது முதல் 19 வயது மற்றும் 20 வயது முதல் 30 வயது வரையிலான பெண்களுக்கு 1 (400 அப) மாத்திரையும் வழங்கப்படும் என்றாா்.
நிகழ்ச்சியில் துணை இயக்குநா் சுகாதாரப்பணிகள் (திண்டுக்கல்) அனிதா, மாநகா் நல அலுவலா் இந்திரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.