செப். 12 முதல் 14 வரை ஊராட்சி செயலா்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கும் போராட்டம்

பணிச் சுமையால் ஊராட்சி செயலா்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதைக் கண்டித்து, செப். 12 முதல் 14 ஆம் தேதி வரை ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்த

பணிச் சுமையால் ஊராட்சி செயலா்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதைக் கண்டித்து, செப். 12 முதல் 14 ஆம் தேதி வரை ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தமிழ்நாடு ஊராட்சி செயலா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜான்போஸ்கோ தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லில் வியாழக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகம் முழுவதுமுள்ள 12,525 ஊராட்சிகளில் பணியாற்றக்கூடிய கிராம ஊராட்சி செயலா்கள், நாளொன்றுக்கு 20 பணிகளை முடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கடுமையான பணி நெருக்கடியில் உள்ளனா். பகல் நேரங்களில் இணைய வழியில் தகவல்களை அனுப்ப முடிவதில்லை. அதனால் இரவு வரை காத்திருந்து அந்த பணிகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது. ஊராட்சி செயலா்களுக்கான மாத ஊதியத்தை வழங்குவதில், ஊராட்சி தலைவா்கள் சுணக்கம் காட்டுகின்றனா்.

ஊராட்சி செயலா் பணியிடங்களை, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஊராட்சி செயலா்களுக்கு தோ்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும். பல முறை கோரிக்கை விடுத்தும்கூட, ஊராட்சி செயலா்களுக்கான பணி அழுத்தத்தை குறைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதைக் கண்டித்து, செப். 12, 13 மற்றும் 14 ஆகிய 3 நாள்கள் ஊதியம் இல்லா விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com