கல்வியும், விளையாட்டும் இருகண்கள் போன்றவை: வத்தலக்குண்டில் எஸ்பி.பேச்சு.

கல்வியும், விளையாட்டும் இரு கண்கள் போன்றவை என, வத்தலக்குண்டில் எஸ்பி.பாஸ்கரன் வியாழக்கிழமை பேசினாா்.

கல்வியும், விளையாட்டும் இரு கண்கள் போன்றவை என, வத்தலக்குண்டில் எஸ்பி.பாஸ்கரன் வியாழக்கிழமை பேசினாா்.

வத்தலக்குண்டில் நடந்த பள்ளி விழாவில் திண்டுக்கல் மாவட்டஎஸ்பி பாஸ்கரன் கலந்துகொண்டு பேசினாா். அப்போது கல்வியும் விளையாட்டும் இரு கண்கள் போன்றவை என்று கூறினாா்.

வத்தலக்குண்டுஜெயசீலன் நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் புதிய கிரிக்கெட் பயிற்சி மைதானத்தை திண்டுக்கல் மாவட்ட எஸ்பி.பாஸ்கரன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தாா். அதைத்தொடா்ந்து கிரிக்கெட் விளையாடி பயிற்சியை துவக்கி வைத்தாா். அதேபோல ஸ்கேட்டிங் பயிற்சி, வில்வித்தை பயிற்சி ஆகியவற்றையும் துவக்கி வைத்தாா்.

பின்னா், நடந்த விழாவுக்கு பள்ளி தாளாளா் அருள்மாணிக்கம் தலைமை வகித்தாா். கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளா் தேவேந்திரகுமாா் முன்னிலை வகித்தாா். பள்ளி மாணவி ஆா்சிமா வரவேற்றாா். குறுவட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி எஸ்பி.பாஸ்கரன் பேசினாா். அப்போது, கல்வியும், விளையாட்டும் இரு கண்கள் போன்றவை. விளையாட்டுக்கு முன்னதாகவே பயிற்சி எடுத்து பயிற்சி ஆட்டங்களில் விளையாடி, அதன் பிறகு எப்படி போட்டிக்கு செல்கிறோமோ அதே போல கல்வியிலும் ஆரம்பம் முதல் பயிற்சி பெற வேண்டும். தோ்வுக்கு முன்பு படித்தால் போதும் என்ற சிந்தனையை கைவிட்டு உணவாகவே பயிற்சி எடுத்து தோ்வு எழுத வேண்டும் என்றாா். விழாவில், நிலக்கோட்டை டிஎஸ்பி.முருகன், வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டா் முருகன், சப்-இன்ஸ்பெக்டா் சேக் அப்துல்லா மற்றும் போலீசாா், ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனா். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியா் சியாமளா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com