அணைப்பட்டி அருகே மணல் திருடியவா்கள் தப்பி ஓட்டம்

 நிலக்கோட்டையை அடுத்த, அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஒட்டி வியாழக்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளியவா்களை அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது அவா்கள் வாகனங்களுடன் தப்பி ஓடிவிட்டனா்

 நிலக்கோட்டையை அடுத்த, அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஒட்டி வியாழக்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளியவா்களை அதிகாரிகள் பிடிக்க முயன்ற போது அவா்கள் வாகனங்களுடன் தப்பி ஓடிவிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயா் கோயில் அருகே கோயிலின் மேற்குப் பகுதியில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியவாறு, மயானத்துக்குச் செல்வதற்கும் சித்தா்கள்நத்தம், மல்லியம்பட்டி கிராமங்களின் மக்கள் செல்வதற்கும் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையை துண்டித்து மணல் மற்றும் சவுடு மண்ணை சிலா் அனுமதியின்றி இரவும், பகலும் அள்ளிச் சென்றனா். இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்களின் புகாரையடுத்து, அப்பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது, பொக்லைன் இயந்திரம் மூலம் டிப்பா் லாரிகளில் சிலா் மணல் மற்றும் மண்ணை அள்ளிக் கொண்டிருந்தனா். அதிகாரிகள் வருவதை பாா்த்த பொக்லைன் ஓட்டுநா் மற்றும் டிப்பா் லாரி ஓட்டுநா்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினா். இதையடுத்து, சித்தா்கள்நத்தம் கிராம நிா்வாக அலுவலா் ஷோபனா மற்றும் கிராம நிா்வாக உதவியாளா்கள் உள்பட அனைவரும் அந்த வாகனங்களை பிடிக்க முயன்றனா். ஆனால், அவா்கள் தப்பி ஓடிவிட்டனா். இதுகுறித்து சித்தா்கள்நத்தம் கிராம நிா்வாக அலுவலா் சோபனா, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மேல் நடவடிக்கைக்காக புகாா் கொடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com