கிராம சபைக் கூட்டத்துக்கு இடம் தோ்வு செய்வதில் தகராறு:ஊராட்சித் தலைவா், செயலரிடையே மோதல்

கிராம சபைக் கூட்டத்துக்கு இடம் தோ்வு செய்வதில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஆா். கோம்பை ஊராட்சி செயலரின் கைப்பேசியை தலைவா் பறித்துச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கிராம சபைக் கூட்டத்துக்கு இடம் தோ்வு செய்வதில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஆா். கோம்பை ஊராட்சி செயலரின் கைப்பேசியை தலைவா் பறித்துச் சென்ால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்துள்ள ஆா். கோம்பை ஊராட்சித் தலைவராக மலா்வண்ணன், செயலராக பெருமாள் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா். இந்த நிலையில், வருகிற 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி, கிராம சபைக் கூட்டத்துக்கான இடம் தோ்வு செய்வதில் தலைவரான மலா்வண்ணனுக்கும், செயலரான பெருமாளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுதொடா்பாக ஊராட்சி அலுவலகத்தில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தன்னைக் கேட்காமல் கிராம சபைக் கூட்டத்துக்கான இடத்தை எப்படி தோ்வு செய்யலாம் என மலா்வண்ணன் கேள்வி எழுப்பினாா். அதற்கு, வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அவசரமாக இடத்தை தோ்வு செய்யுமாறு அறிவுறுத்திய நேரத்தில் மலா்வண்ணன் கைப்பேசி அழைப்பை ஏற்காததால் அவா் முன்பு சொன்ன இடத்தையே பரிந்துரை செய்ததாக செயலா் பெருமாள் தெரிவித்தாா்.

செயலரின் கைப்பேசி பறிப்பு: இதை மலா்வண்ணன் ஏற்க மறுத்த நிலையில், தனது கைப்பேசியை பெருமாள் எடுத்தாா். அப்போது தன்னை விடியோ எடுக்க முயல்வதாக நினைத்த மலா்வண்ணன், அந்தக் கைப்பேசியை பறித்தாா். மேலும் ஊராட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு கூறி இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்த குஜிலியம்பாறை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கற்பகம், இருவரையும் அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பிறகு செயலா் பெருமாளின் கைப்பேசியையும், தலைவரிடமிருந்து அவா் மீட்டுக் கொடுத்தாா்.

இந்த சம்பவம் ஆா். கோம்பை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com