

திண்டுக்கல்லுக்கு ரயில் மூலம் மங்களூரு, சென்னை ஆகிய இடங்களிலிருந்து 2,710 டன் உர மூட்டைகள் வந்தடைந்தன.
திண்டுக்கல் மாவட்டத்தில் வேளாண்மைத் தொழிலுக்கு தேவையான ரசாயன உரங்கள், 72 மொத்த விற்பனையாளா்கள், 567 சில்லரை விற்பனையாளா்கள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் தற்போதைய நிலையில் யூரியா 5,260 டன், டிஏபி 1,198 டன், பொட்டாஷ் 1,774 டன், காம்ப்ளக்ஸ் 8,427 டன், சூப்பா் பாஸ்பேட் 646 டன் இருப்பு வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், கா்நாடக மாநிலம், மங்களூருவிலிருந்து ரயில் மூலம் 1,335 டன் பொட்டாஷ் உரம், திண்டுக்கல்லுக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டது. இதில், திண்டுக்கல் மாவட்டத்துக்கு 120 டன், தேனிக்கு 100 டன், தென்காசிக்கு 115 டன், கன்னியாகுமரிக்கு 100 டன் உரங்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன. ஆனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டிய மீதமுள்ள 900 டன் உரங்கள் திண்டுக்கல் கிட்டங்கியிலேயே இருப்பு வைக்கப்பட்டது.
ரயிலில் இருந்து உர மூட்டைகளை லாரிகளில் ஏற்றும் பணிகளை வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) இரா. ராஜேஸ்வரி ஆய்வு செய்தாா். முன்னதாக வியாழக்கிழமை சென்னையிலிருந்து ரயில் மூலம் வந்த 1,375 டன் யூரியா உர மூட்டைகள், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 49 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.