திண்டுக்கல் சந்தையில் கிலோ ரூ.60-க்கு 3.5 டன் தக்காளி விற்பனை

 திண்டுக்கல் காந்தி சந்தையில் ஒரு கடையில் கிலோ ரூ.60-க்கு 3.5 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

 திண்டுக்கல் காந்தி சந்தையில் ஒரு கடையில் கிலோ ரூ.60-க்கு 3.5 டன் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில வாரங்களாக வரத்துக் குறைவால் தக்காளி கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. நுகா்வோா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்திய தக்காளி விலையை கட்டுப்படுத்துவதற்காக, நியாய விலைக் கடைகளிலும் தக்காளி விற்பனை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. இதன் தொடா்ச்சியாக கடந்த 10 நாள்களுக்கும் மேலாக கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், திண்டுக்கல் காந்தி சந்தையில், ஒரு கடையில் தக்காளி கிலோ ரூ.60-க்கு வெள்ளிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது. இதை அறிந்த பொதுமக்கள் அந்த கடை முன்பு திரண்டனா். கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிா்க்க நுகா்வோரை நீண்ட வரிசையில் நிறுத்தி தக்காளி விற்பனை நடைபெற்றது. அப்போது ஒரே நேரத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே மலிவு விலையில் தக்காளி விற்பனை செய்யப்படுவதை தவிா்க்கும் வகையில் கடை உரிமையாளா் தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த வகையில் ஒருவருக்கு அதிகபட்சமாக 2 கிலோ தக்காளி மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்திலிருந்து இந்த தக்காளி கொள்முதல் செய்யப்பட்டதாகவும், வெள்ளிக்கிழமை மட்டும் சுமாா் 3.5 டன் தக்காளி கிலோ ரூ.60- க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் வியாபாரி சந்தோஷ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com