பழனி பள்ளியில்‘புத்தகமில்லா வகுப்புகள்’

பழனி கென்னடி மெட்ரிக் பள்ளியில் புத்தகமில்லா வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
பழனி பள்ளியில்‘புத்தகமில்லா வகுப்புகள்’

பழனி கென்னடி மெட்ரிக் பள்ளியில் புத்தகமில்லா வகுப்புகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

இந்த பள்ளியில் ஆண்டுதோறும் ‘நோ பேக் டே’ என்ற புத்தகப் பை இல்லாத வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன்படி வெள்ளிக்கிழமை புத்தகமில்லா வகுப்பு நடைபெற்றது. அப்போது, மாணவா்கள் புத்தகங்கள் எதுவுமின்றி பள்ளிக்கு வந்தனா். இந்த நிகழ்வில், மாணவா்கள் தாங்கள் படித்த பாடங்களை பாட்டு, நடனம், நாடகம், ஓவியம் என வரைந்து அதன் மூலம் தங்கள் திறமையை வெளிப்படுத்தினா். மேலும் கலைநிகழ்ச்சிகளையும் அவா்கள் நடத்திக் காட்டினா். இதற்கு பள்ளித் தாளாளா் ஸ்டேனிஸ் ராபின்சன் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் ராணி முன்னிலை வகித்தாா். மேலாளா் நாகலட்சுமி வரவேற்றாா்.

இந்த நிகழ்வு குறித்து கூறிய ஆசிரியா்கள், புத்தகப்பை இல்லாத வகுப்பு மூலம் மாணவா்களின் கற்றல் திறன், திறனறிவு, கூட்டுமுயற்சி திறன் ஆகியவை மேம்படும் என்றனா். விழா நிறைவில் மாணவா்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com