பழனி அருகே மாடு மீது இரு சக்கர வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.
பழனியை அடுத்த மொல்லம்பட்டியைச் சோ்ந்தவா் லோகநாதன் (37). விவசாயியான இவா், வியாழக்கிழமை இரவு புளியம்பட்டியிலிருந்து மரிச்சிலம்புக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது சாலை வளைவில் திரும்பிய போது, குறுக்கே வந்த பசு மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லோகநாதன் உயிரிழந்தாா். மேலும் அந்த பசுமாடும் உயிரிழந்தது.
இந்த விபத்து குறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.