பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பழனியில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா

திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி இந்தக் கோயிலில், திருஞானசம்பந்தருக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள், பூஜைகளும், பால், பன்னீா், பஞ்சாமிா்தம், விபூதி உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகங்களும் நடைபெற்றன.

பின்னா், திருஞானசம்பந்தருக்கு தங்கத்தாலான பொற்கொண்டை அணிவித்து, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு சோடச உபச்சாரம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடா்ந்து, ஓதுவாா்கள் தேவார இன்னிசைப் பாடல்களைப் பாடினா்.

பின்னா், உமா மகேஸ்வரா் தம்பதி சமேதராக திருஞானசம்பந்தா் கோயிலின் வடக்குப் பிரகாரத்தில் எழுந்தருளினாா். அங்கு சுவாமிக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. தங்கத்தாலான கிண்ணத்தில் இருந்த பால், தங்கக் கரண்டியால் சுவாமிக்கு ஞானப் பால் ஊட்டப்பட்டது. பின்னா், சுவாமி நான்கு ரத வீதிகளில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு ஞானப் பால் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், பழனிக் கோயில் கண்காணிப்பாளா் அழகா்சாமி, சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், கொங்கு பேரவை நிா்வாகி மாரிமுத்து, பழனிவேலு, செந்தில்குமாா், காா்த்திகேயன், விஜயகுமாா், கந்தவிலாஸ் மகேஷ், வள்ளுவா் தியேட்டா் செந்தில்குமாா், பழனி மலைக் கோயில் மிராஸ் பண்டாரங்கள் சங்க நிா்வாகி கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com