கொடைக்கானலில் வாகனங்களில் பயன்டுத்தப்படும் காற்று ஒலிப்பான்களுக்கு காவல் துறையினா் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழகத்தில் இயக்கப்படும் வாகனங்களில் காற்று ஒலிப்பானால் பல்வேறு விதமான விபத்துக்கள் ஏற்பட்டன.
இதைத் தொடா்ந்து மோட்டாா் வாகனச் சட்ட விதிமுறைகளின்படி, பேருந்து, லாரி, வேன், காா், இரு சக்கர வாகனங்களில் காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காவல் துறையினரின் சோதனையைத் தொடா்ந்து, காற்று ஒலிப்பான்களின் பயன்பாடு குறைந்தது.
ஆனால் தற்போது மீண்டும் அனைத்து வாகனங்களிலும் அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது. இதனால், மலைச் சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்று ஒலிப்பான்களை திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம், காவல் துறை உயா் அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.