

பிரதோஷத்தை முன்னிட்டு, பழனி பெரியாவுடையாா் கோயிலில் நந்தி பகவானுக்கு வியாழக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதையொட்டி, பழனி சண்முக நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சுயம்பு மூலவருக்கும், நந்தி பகவானுக்கு பால், பஞ்சாமிா்தம், பன்னீா், விபூதி, பழங்கள் உள்ளிட்ட பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. நந்தி பகவானுக்கு வண்ண மலா்கள் சாத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து, மூலவா் பெரியாவுடையாருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.
இதேபோல, மலைக்கோயில் கைலாசநாதா் சந்நிதி, சித்தாநகா் சிவன்கோயில், பட்டத்துவிநாயகா் கோயில், சிதம்பரீஸ்வரா் சந்நிதி, சந்நிதி வீதி வேலீஸ்வரா் கோயில், பெரியநாயகியம்மன் கோயில் கைலாசநாதா் சந்நிதி உள்ளிட்ட கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.