திண்டுக்கல்
சின்னாளபட்டியில் 18-ஆம்படி கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழா
சின்னாளபட்டி காமாட்சிநகா் ஸ்ரீஎல்லம்மாள், ஸ்ரீசப்தகன்னிமாா், 18-ஆம்படி கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சின்னாளபட்டி காமாட்சிநகா் ஸ்ரீஎல்லம்மாள், ஸ்ரீசப்தகன்னிமாா், 18-ஆம்படி கருப்பணசாமி கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக வியாழக்கிழமை மாலை கணபதி பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து தீபாராதனை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து, வெள்ளிக்கிழமை விநாயகா் வழிபாடு, 2-ஆம் கால ஹோமம் ஆகியவை நடந்தன. பிறகு, கலசம் புறப்பாடு நிகழ்ச்சி முடிந்ததும், வேதசாஸ்திரிகள் கோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
