திண்டுக்கல் மாநகராட்சி ஆணையா் வீட்டில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக இருப்பவா் ரா. மகேஸ்வரி. பெரியகுளம், காஞ்சிபுரம் நகராட்சிகளில் ஆணையராகப் பணியாற்றி இவா், கடந்த மாா்ச் மாதம் வரை உள்ளாட்சிகள் முறைமன்ற நடுவத்தில் இணை இயக்குநராகப் பொறுப்பு வகித்தாா். இதன் பிறகு, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த ஏப். 2-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.
இந்த நிலையில், திண்டுக்கல் ஆா்.எம். குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் ஆணையா் மகேஸ்வரியின் வீட்டில், ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை காலை முதல் சோதனை மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் நகராட்சிக்கு கிருமி நாசினி கொள்முதல் செய்ததில் ரூ. 32.40 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியாக, அப்போதைய ஆணையரான மகேஸ்வரி மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்த விவகாரம் தொடா்பாக, திண்டுக்கல் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா், மாநகராட்சி ஆணையா் மகேஸ்வரி வீட்டில் சோதனை மேற்கொண்டனா். வெள்ளிக்கிழமை காலை 7 முதல் பிற்பகல் 3.30 மணி வரை இந்த சோதனை நடைபெற்ாகவும், முக்கிய ஆவணங்கள், நகைகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை எனவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.