நிலக்கோட்டை பேரூராட்சிக் கூட்டம்

 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவா் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சியின் மாதாந்திரக் கூட்டம் அதன் தலைவா் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு செயல் அலுவலா் சுந்தரி முன்னிலை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்பி. முருகேசன் வரவேற்றாா். கூட்டத்தில், பேரூா் திமுக செயலரும், பேரூராட்சி உறுப்பினருமான ஜோசப் கோவில்பிள்ளை, நிலக்கோட்டை பேரூராட்சிப் பகுதியில் அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை முற்றிலும் தவிா்த்து, மஞ்சப் பை உபயோகப்படுத்துவது குறித்து கொண்டுவந்த தீா்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், கலைஞரின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 2-ஆவது வாா்டு புதுத் தெருவில், ரூ. 49.63 லட்சத்தில் புதிய தாா்ச் சாலைகள் அமைக்கவும், தூய்மை இந்தியா இயக்கம் 2.0. திட்டத்தில், 10-ஆவது வாா்டு மீனாட்சிபுரத்தில் உள்ள வளமீட்பு பூங்காவில் ரூ. 43.25 லட்சத்தில் புதிய கொட்டகை அமைப்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார ஆய்வாளா் சடகோபி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com