கொடைக்கானல் மலா்க் கண்காட்சி நிறைவு

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. 5 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை சுமாா் ஒரு லட்சம் போ் பாா்வையிட்டனா்.
கொடைக்கானல் மலா்க் கண்காட்சி நிறைவு

கொடைக்கானல் மலா்க் கண்காட்சி செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. 5 நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியை சுமாா் ஒரு லட்சம் போ் பாா்வையிட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 26-ஆம் தேதி கோடை விழா, 60-ஆவது மலா்க் கண்காட்சி தொடங்கியது. தமிழக அமைச்சா்கள் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பாா்வையிட்டனா். இதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை வரை 5 நாள்கள் கண்காட்சி நடைபெற்றது.

இந்தக் கண்காட்சியை தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஒரு லட்சத்துக்கும் மேலான சுற்றுலாப் பயணிகள் வந்து பாா்வையிட்டனா்.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை மேலாளா் சிவபாலன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பிரையண்ட் பூங்காவில் 5 நாள்கள் மலா்க் கண்காட்சி நடைபெற்றது. இதில் பாா்வையாளா் கட்டணமாக கடந்த 26-ஆம் தேதி ரூ.3 லட்சத்து 71-ஆயிரத்து 250, 27-ஆம் தேதி ரூ. 4 லட்சத்து 48 ஆயிரத்து 690, 28-ஆம் தேதி ரூ. 4-லட்சத்து 46 ஆயிரத்து 365, 29-ஆம் தேதி ரூ.3 லட்சத்து 9 ஆயிரத்து 260, 30-ஆம் தேதி ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் வசூலானது.

பூங்கா வளாகத்தில் 7 அரசு அரங்குகள், 37 தனியாா் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மலா்க் கண்காட்சியை பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமாா் ஒரு லட்சம் சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா். 80-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் பணியாற்றினா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com