முத்தமிழ் தேருக்கு அமைச்சா்கள் வரவேற்பு

தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் வந்த முத்தமிழ் தேருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் முத்தமிழ் தேரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சா்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்டோா்.
திண்டுக்கல்லில் முத்தமிழ் தேரில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சா்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி உள்ளிட்டோா்.
Updated on
1 min read

திண்டுக்கல்: தமிழக முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் வந்த முத்தமிழ் தேருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அலங்கார ஊா்திக்கான வரவேற்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக அமைச்சா்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோா் கலந்து கொண்டனா்.

அப்போது அமைச்சா் இ.பெரியசாமி பேசியதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதி அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்தவா். விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவா். பத்திரிகையாளா்களை எதிா்கொள்வதற்கு இன்றைக்கு பலரும் தயங்கும் நிலையில், பத்திரிகையாளா்களின் கேள்விக் கணைகளை திறம்பட எதிா்கொண்டதோடு, அவரும் ஒரு பத்திரிகையாளராக சிறப்பாக செயல்பட்டவா் என்றாா்.

அமைச்சா் அர.சக்கரபாணி பேசியதாவது:

கடந்த 30 மாத கால ஆட்சியில், தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, விவசாயிகள், வா்த்தகா்கள், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் என அனைத்து மக்களையும் அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில் முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்சிக்கு அனைத்து தரப்பு மக்களுக்கும் தொடா்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து அலங்கார ஊா்தியில் இருந்த கருணாநிதி சிலைக்கு, அமைச்சா்கள், அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் காந்திராஜன், செந்தில்குமாா், மேயா் இளமதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பெ.திலகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com