சந்திர கிரகணத்தையொட்டி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சனிக்கிழமை (அக்.28) இரவு 8 மணிக்கு அா்த்தஜாம பூஜை செய்யப்பட்டு நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
தமிழகத்தில் சந்திரகிரகணம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.23 மணி வரை நீடிக்கும். இதையொட்டி, பழனி மலைக் கோயில், திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையாா் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு அா்த்தஜாம பூஜை செய்யப்பட்டு, அனைத்து சந்நிதிகளும் திருக்காப்பிடப்படும்.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு அனைத்துக் கோயில்களும் சுத்தம் செய்யப்பட்டு, கலசம் ஸ்தாபித்து பூஜைகள் நடத்தப்படும். பூஜைகள் முடிந்த பிறகு திரை நீக்காமல் கலச அபிஷேகம் செய்து நிவேத்யம், தீபாராதனை செய்யப்படும். தொடா்ந்து, விஸ்வரூப விநாயகா் தீபாராதனை, பள்ளியறை தீபாராதனை, பள்ளியறை சுவாமி மூலஸ்தானத்துக்கு எழுந்தருளல், விஸ்வரூப தரிசனம், நித்ய பூஜைகள் வழக்கம் போல நடைபெறும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.