உள்ளாட்சித் துறை ஊழியா்களுக்கு ஓய்வூதியம்: அமைச்சரிடம் கோரிக்கை

ஊரக உள்ளாட்சித் துறை ஊழியா்களுக்கு ஓய்வூதியம், பணிக்கொடை, அகவிலைப்படி உயா்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கக் கோரி ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் சனிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமியை சனிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா் சம்மேளன நிா்வாகிகள்.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனத்தின் சாா்பில் தூய்மைக் காவலா்களுக்கு ரூ.5

ஆயிரம் ஊதியம் அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திண்டுக்கல்லில் அமைச்சா் இ.பெரியசாமியை சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

இந்த சந்திப்பின்போது, சம்மேளனத்தின் தலைவா் கே.ஆா்.கணேசன், மாவட்டத் தலைவா் ராமசாமி, நிா்வாகிகள் ராணி, மாரியப்பன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அப்போது, அமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மனு அளிக்கப்பட்டது. அதில், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குவோருக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்வதற்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும். ஊழியா்களுக்கு பணிக் கொடை, ஓய்வூதியம், அகவிலைப்படி உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com