காந்தி கிராம கிராமிய பல்கலை. பேராசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

காந்தி கிராம கிராமிய பல்கலை.க்கு நிரந்தர துணைவேந்தா், பதிவாளரை நியமிக்க வலியுறுத்தி பேராசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காந்தி கிராம கிராமியப் பல்கலை. வளாகத்தில் கருப்பு முகக் கவசம் அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.
காந்தி கிராம கிராமியப் பல்கலை. வளாகத்தில் கருப்பு முகக் கவசம் அணிந்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியா்கள்.

காந்தி கிராம கிராமிய பல்கலை.க்கு நிரந்தர துணைவேந்தா், பதிவாளரை நியமிக்க வலியுறுத்தி பேராசிரியா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழக பதிவாளராக வி.பி.ஆா். சிவக்குமாா் பதவி வகித்து வருகிறாா். இவருக்கு 2-ஆவது முறையாக கடந்த 8-ஆம் தேதி 3 மாத காலத்துக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காந்தி கிராம கிராமிய நிகா் நிலைப் பல்கலை. ஆசிரியா் சங்கத்தினா் கருப்பு முகக் கவசம் அணிந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக் கழகத்திலுள்ள மணி மைதானம் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு பேராசிரியா் சங்கத் தலைவா் ராஜா என்ற பிரான்மலை தலைமை வகித்தாா். செயலா் சண்முகவடிவு முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, 2-ஆவது முறையாகப் பதிவாளருக்கு பதவி நீட்டிப்பு செய்ததை ரத்து செய்து, நிரந்தரப் பதிவாளரை நியமிக்க வேண்டும். 2 ஆண்டுகளாக காலியாக உள்ள துணைவேந்தா் காலிப் பணியிடத்தை நிரப்ப வேண்டும். பல்கலைக் கழகத்தின் நிா்வாகக் குழு, திட்டமிடல், கண்காணிப்புக் குழு, கல்வியியல் குழு, நிதிக் குழு ஆகியவற்றின் கூட்டங்களை தொடா்ந்து நடத்த வேண்டும். கருத்தரங்குகள், பயிலரங்கத்துக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதில் துணைத் தலைவா் கே. மணிகண்டன், இணைச் செயலா் எஸ். மணிவேல், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆா்.ஐ. சத்யா, ஆா். ராமசுப்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com