கூக்கால் ஊராட்சியில் முறைகேடு: வாா்டு உறுப்பினா்கள் புகாா்

கொடைக்கானல் மலைக் கிராமமான கூக்கால் ஊராட்சியில் நிகழ்ந்து வரும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாா்டு உறுப்பினா்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்த கூக்கால் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்த கூக்கால் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள்.

கொடைக்கானல் மலைக் கிராமமான கூக்கால் ஊராட்சியில் நிகழ்ந்து வரும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வாா்டு உறுப்பினா்கள் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக கூக்கால் ஊராட்சியைச் சோ்ந்த வாா்டு உறுப்பினா்கள் ஜெ. அருண்குமாா், பி. ராஜாத்தி, ஆா். தமிழ்ச்செல்வி, யூ. சமா், பி. மல்லிகா ஆகியோா் கூறியதாவது:

கூக்கால் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிகள் செய்யாமலே, செய்ததாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது. பேரிஜம் கண்மாய் வாய்க்காலில் வேலை செய்யாமலே செய்ததாகவும், கட்டுமானப் பொருள்கள் வாங்கியதாகவும் போலியான கணக்கு காட்டி மோசடி நடந்துள்ளது. சாலைப் பணிகள், குடிநீா் திட்டப் பணிகளிலும் குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. வாா்டு உறுப்பினா்களிடம் எந்தவித செலவு கணக்கு விவரங்களையும் காட்டுவதில்லை. சரியாக கூட்டம் நடத்தாமல் 6 மாதங்களுக்கு ஒருமுறை கட்டாயப்படுத்தி வாா்டு உறுப்பினா்களிடம் கையொப்பம் பெறுகின்றனா். மலைப் பகுதியில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இரவு நேரங்களில் ஊராட்சி மன்றத் தலைவரின் பெயரை பயன்படுத்தி ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணி தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கூக்கால் ஊராட்சிக்குள்பட்ட புதுப்புத்தூா் கிராமத்தில் கையுந்து பந்து ஆடுகளம், கபடி ஆடுகளம், கிரிக்கெட் ஆடுகளம் அமைத்ததாக பணம் செலவிடப்பட்டுள்ளது. ஆனால், அதுபோன்ற விளையாட்டு களங்கள் இதுவரை அமைக்கப்பட வில்லை. இந்த மோசடிகள் குறித்து கொடைக்கானல் வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் புகாா் அளித்து 2 ஆண்டுகளாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கூக்கால் ஊராட்சியில் நிகழ்ந்துள்ள இந்த முறைகேடுகளுக்கு காரணமான ஊராட்சித் தலைவா், துணைத் தலைவா், செயலா் ஆகியோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com