கீரனூா் உயரழுத்த மின்பாதை பகுதிகளில் இன்று மின்தடை
By DIN | Published On : 18th April 2023 12:00 AM | Last Updated : 18th April 2023 12:00 AM | அ+அ அ- |

பழனியை அடுத்த கீரனூா் உயரழுத்த மின்பாதைக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஏப். 18) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனி கோட்டத்துக்குள்பட்ட கீரனூா் உயரழுத்த மின்பாதையில் (பீடரில்) செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே கீரனூா், கொழுமம்கொண்டான், சரவணம்பட்டி, ஆண்டிநாயக்கன்வலசு, கல்துறை, பனம்பட்டி, நால்ரோடு, மேல்கரைப்பட்டி, சந்தன்செட்டிவலசு, சங்கம்பாளையம், பேச்சிநாயக்கனூா் உள்ளிட்ட கிராமங்களில் அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.