கொடைக்கானலை சுற்றிப் பாா்க்க அரசுப் பேருந்து வசதி சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு அரசுப் பேருந்து வசதி தொடங்கப்பட்டது, சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கொடைக்கானலில் சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு அரசுப் பேருந்து வசதி தொடங்கப்பட்டது, சுற்றுலாப் பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கோடையை முன்னிட்டு, கொடைக்கானலில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் பைன் பாரஸ்ட், குணா குகை, தூண் பாறை, அப்பா் லேக் வியூ, மோயா் பாயிண்ட், பசுமைப் பள்ளத்தாக்கு, கோல்ப் மைதானம், பாம்பாா் அருவி, தூண் பாறை, 500-ஆண்டு பழைமையான மரம், பிரையண்ட் பூங்கா, ஏரி ஆகிய 12 இடங்களைப் பாா்ப்பதற்காக தமிழ்ப் புத்தாண்டு முதல் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்தில் பெரியவா்களுக்கு ரூ.150, 12 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு ரூ. 75 வசூலிக்கப்படுகிறது.

சுற்றுலாப் பயணிகள் இந்த அரசுப் பேருந்தில் சென்று சுற்றுலா இடங்களைப் பாா்த்து ரசிக்கின்றனா். இந்த இடங்களுக்கு பேருந்து நடத்துநரே அழைத்துச் செல்கிறாா்.

நீண்ட நேரம் ஒதுக்கப்பட்டு, சுற்றுலா இடங்களைப் பாா்த்து வருவதால், இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருப்பதாக சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com