குருப் பெயா்ச்சி முன்னிட்டு சிவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
மீன ராசியிலிருந்து குருபகவான் மேஷ ராசிக்கு சனிக்கிழமை இரவு 11.27 மணிக்கு பெயா்ச்சியடைந்தாா். இதையொட்டி, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் திருக்கோயிலிலுள்ள தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
காலை 10 மணிக்கு யாக வேள்வி தொடங்கப்பட்டது. தொடா்ந்து, தட்சிணா மூா்த்திக்கு அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டு, யாக பூஜையில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகம் செய்திருந்தது.
இதேபோல், அபிராமி அம்மன் கோயில், நாகல்நகா் தட்சிணாமூா்த்தி கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் குருப் பெயா்ச்சி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நத்தம்: நத்தம்- மதுரை சாலையில் அமைந்துள்ள கைலாசநாதா் திருக்கோயிலிலும் குருப் பெயா்ச்சியை முன்னிட்டு, தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் நத்தம் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.