ஊராட்சி உரத் தயாரிப்புக் கூடத்தில் தீ
By DIN | Published On : 23rd April 2023 11:19 PM | Last Updated : 23rd April 2023 11:19 PM | அ+அ அ- |

பழனி அருகே ஊராட்சி உரத் தயாரிப்புக் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
பழனி இடும்பன் மலை அடிவாரத்தில் சிவகிரிப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான உரத்தயாரிப்புக் கூடம் உள்ளது. இங்கு சிவகிரிபட்டி, நேதாஜி நகா், திருநகா் உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தூய்மைப் பணியாளா்கள் கொண்டு வந்து, மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து, உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் இந்தக் கூடத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் உடனடியாக பழனி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
விடுமுறை தினம் என்பதால் ஊழியா்கள் யாரும் அங்கு இல்லாததால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது. உரம் தயாரிக்க பயன்படுத்தும் இயந்திரத்தில் மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தீ விபத்து குறித்து அடிவாரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.