உலகப் புத்தக தின விழா
By DIN | Published On : 23rd April 2023 11:20 PM | Last Updated : 23rd April 2023 11:20 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த வேம்பாா்பட்டி கிளை நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை உலகப் புத்தக தின விழா நடைபெற்றது.
இதற்கு நூலகா் ஜெயமணி தலைமை வகித்தாா். புத்தகக் கண்காட்சி, ஓவியம் வரைதல், திருக்கு ஒப்பித்தல், கதை சொல்லுதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு நூலக வாசகா் வட்ட துணைத் தலைவா் கோவிந்தராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா்.புரவலா்களுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.