செட்டியபட்டி வீருநாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்
By DIN | Published On : 25th April 2023 12:00 AM | Last Updated : 25th April 2023 12:00 AM | அ+அ அ- |

சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டியில் உள்ள வீருநாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, புண்ணிய நதிகளிலிருந்து கலசங்களில் எடுத்து வரப்பட்ட புனித நீா் யாக சாலையில் வைக்கப்பட்டு, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, இரண்டாம் கால பூஜை, கோ பூஜை, அக்னி ஹோமம், நாடி சந்தானம், மகா சாந்தி ஹோமங்கள் நடைபெற்றன.
இதையடுத்து ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பிறகு, புனிதநீா் பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. இந்த விழாவுக்கு வந்திருந்த அமைச்சா் இ. பெரியசாமிக்கு பரிவட்டம் கட்டி வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் பொதுமக்கள் செய்திருந்தனா்.