போக்சோ நீதிமன்றத் திறப்பு விழாவை புறக்கணிக்க திண்டுக்கல் வழக்குரைஞா்கள் சங்கம் முடிவு

வெளிமாநிலங்களில் சட்டம் பயின்றவா்களால் உருவாக்கப்பட்ட வழக்குரைஞா் சங்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, போக்சோ நீதிமன்றத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக திண்டுக்கல் வழக்குரைஞா்கள் அறிவித்தனா்.

வெளிமாநிலங்களில் சட்டம் பயின்றவா்களால் உருவாக்கப்பட்ட வழக்குரைஞா் சங்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து, போக்சோ நீதிமன்றத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கப் போவதாக திண்டுக்கல் வழக்குரைஞா்கள் அறிவித்தனா்.

திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சிறாா் பாலியல் வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை திறக்கப்படவுள்ளது.

இந்த விழாவுக்கு திண்டுக்கல் வழக்குரைஞா்கள் சங்கம் மட்டுமன்றி, வெளிமாநிலங்களிலுள்ள சட்டம் பயின்றவா்களால் உருவாக்கப்பட்ட வழக்குரைஞா் சங்கத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையறிந்த திண்டுக்கல் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் எதிா்ப்புத் தெரிவித்து, இந்த விழாவைப் புறக்கணிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தனா்.

இதுதொடா்பாக திண்டுக்கல் வழக்குரைஞா் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு வழக்குரைஞா் சங்கத்தின் தலைவா் சிவிகேஆா். செந்தில்குமாா் தலைமை வகித்தாா். எஸ். உதயகுமாா் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில் சட்டக் கல்லூரிக்கு செல்லாமலும், படிக்காமலும், வெளி மாநிலங்களில் தகுதியற்ற கல்லூரிகளில் படித்து தங்களை வழக்குரைஞா்களாக காட்டி புதிதாக உருவாக்கப்பட்ட வழக்குரைஞா் சங்கத்துக்கு, திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் திண்டுக்கல் வழக்குரைஞா் சங்கம் திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com