

திண்டுக்கல் முத்தழகுப்பட்டி செபாஸ்தியாா் ஆலய திருவிழாவை முன்னிட்டு, 1000 ஆடுகள், 3 ஆயிரம் கோழிகளைப் பலியிட்டு மாபெரும் அசைவ விருந்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
செபாஸ்தியாா் ஆலயத் திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக திருப்பலியைத் தொடா்ந்து, காணிக்கைப் பவனி நடைபெற்றது.
விழாவையொட்டி, திண்டுக்கல், அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்துவதற்காக ஆடுகள், கோழிகளைக் கொண்டு வந்தனா். மேலும், பலா் அன்னதான விருந்துக்கு தேவையான அரிசி, மளிகைப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து, ஆலய நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா். அனைத்துத் தரப்பினரும் இந்த விருந்தில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக ஹலால் முறையில் ஆடுகள் வெட்டப்பட்டன.
1000 ஆடுகள், 3 ஆயிரம் கோழிகள்:
செபாஸ்தியாா் ஆலயத்துக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட 1000 ஆடுகள், 3 ஆயிரம் கோழிகள், 4 டன் அரிசி, 3 டன் காய்கனிகள், மளிகைப் பொருள்களைப் பயன்படுத்தி அசைவ விருந்து தயாரிக்கப்பட்டன. காய்கனிகளில் தக்காளி மட்டும் 2 டன் இடம் பெற்றிருந்தது.
செவ்வாய்க்கிழமை மாலை மன்றாட்டு ஜெபம், வேண்டுதல் பூஜைக்கு பிறகு, மாபெரும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது. பந்திக்கு 1000 போ் வீதம் அமரும் வகையில் விடிய விடிய நடைபெற்ற விருந்தில், திண்டுக்கல் பகுதியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.