இளைஞா் கொலை வழக்கில் 6 பேரிடம் போலீசாா் விசாரணை
By DIN | Published On : 09th August 2023 12:00 AM | Last Updated : 09th August 2023 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரிடம் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி. இவரது மகன் அருளானந்தபாபு (30). இவா், இதே பகுதியைச் சோ்ந்த முருகேஸ்வரி என்பருக்கு சொந்தமான கடலைமிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். குடைப்பாறைப்பட்டி கன்னிமாா்நகா் பகுதியில் அருளானந்தபாபு திங்கள்கிழமை பிற்பகல் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது 6-க்கும் மேற்பட்ட நபா்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனா்.
இதுகுறித்து தகவலறிந்த திண்டுக்கல் தெற்கு காவல் நிலைய போலீஸாா், அருளானந்தபாபு சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்த நிலையில், முத்தழகுப்பட்டியைச் சோ்ந்த 6 பேரை செவ்வாய்க்கிழமை பிடித்து, அருளானந்தபாபு கொலை தொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.