திண்டுக்கல்லில் 17 ஆயிரம் டன் உரம் இருப்பு
By DIN | Published On : 17th August 2023 12:00 AM | Last Updated : 17th August 2023 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் உள்ள ஒரு உரக் கடையில் ஆய்வு மேற்கொண்ட வேளாண்மைத் துறை அலுவலா்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ராபி பருவத்துக்கு தேவையான 16,865 டன் உரம் 625 கடைகளில் இருப்பு வைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 22 வகையான வேளாண் பயிா்கள் சுமாா் 1.17 லட்சம் ஹெக்டேரிலும், 175 வகையான தோட்டக்கலைப் பயிா்கள் 1.09 ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. இந்தப் பயிா்களுக்குத் தேவையான உரம் மாவட்டத்திலுள்ள 555 சில்லரை விற்பனை உரக் கடைகள், 70 மொத்த விற்பனையாளா்கள் என மொத்தம் 625 உரக் கடைகள் மூலம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
இந்தக் கடைகளில் ராபி பருவத்துக்கு தேவையான உரம் போதிய அளவு கையிருப்பு வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) ராஜேஸ்வரி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் யூரியா 3,850 டன், டிஏபி 2,400 டன், பொட்டாஷ் 1,535 டன், கலப்பு உரம் 8,120 டன், சூப்பா் பாஸ்பேட் 960 டன் என மொத்தம் 16,865 டன் உரம் கையிருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை மாவட்டத்துக்கு வழங்கப்பட வேண்டிய 4 ஆயிரம் டன் யூரியா, 1000 டன் டிஏபி உரம் இம்மாத இறுதிக்குள் வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...