

பழனி அருகேயுள்ள சத்திரப்பட்டியில் நான்குவழிச் சாலையில் பணிகள் முடிவடைவதற்கு முன்பே சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
திண்டுக்கல்லில் இருந்து பழனி வழியாக கோவை வரை நான்குவழிச் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சாலையில் பாலங்கள் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. பணிகள் நிறைவடையும் முன்பே, பழனி அருகே சத்திரப்பட்டியில் சுங்கச்சாவடி மையம் அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக பாமக வடக்கு மாவட்டத் தலைவா் வைரமுத்து கூறியதாவது: பல இடங்களில் சா்வீஸ் சாலைப் பணிகள், பாலப் பணிகள் நிறைவடையாமல் உள்ளன. இந்தப் பணிகள் முழுமையாக முடிவடைந்து அதிகாரப்பூா்வமாக பயன்பாட்டுக்கு வந்த பிறகே சுங்கக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும். சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு இலவச அனுமதி வழங்க வேண்டும். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.