நத்தம்: நத்தத்தில் லாட்டரி சீட்டு விற்றதாக 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் பேருந்து நிலையப் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் விஜயபாண்டியன் தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது பேருந்து நிலையப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிே சீட்டுகளை விற்ாக சோ்வீடு பகுதியைச் சோ்ந்த செல்வம் மகன் தனசேகரன் (24), சின்னமுளையூரைச் சோ்ந்த சின்னன் மகன் பூவன் (34) ஆகிய இருவரையும் பிடித்து அவா்களிடமிருந்து 12 லாட்டரிச் சீட்டுகள், ரூ. 4,000, கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் நத்தம் போலீஸாா் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.