செம்பட்டி அருகே காணாமல் போன பள்ளி மாணவியை மீட்கக் கோரி, அவரது பெற்றோா், கிராம மக்கள் காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு, தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நடுப்பட்டி அருகே கெண்டிச்சம்பட்டியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவியை கடந்த கடந்த சனிக்கிழமை முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோா் செம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இந்த நிலையில், போலீஸாா் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அலட்சியமாகச் செயல்படுவதாகவும் கூறி, பெற்றோா், கிராம மக்கள் என சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டோா் செம்பட்டி காவல் நிலத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால், போலீஸாா் காவல் நிலைய நுழைவாயில் கதவை அடைத்துக் கொண்டனா்.
இதைக் கண்டித்து, கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுயிட்டு, தரையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் மாணவியைக் கண்டுபிடித்து விடுவோம் எனவும் போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.