மின்கல வாகனங்களை புதன்கிழமை ஆய்வு செய்த நத்தம் பேரூராட்சித் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்சா.
மின்கல வாகனங்களை புதன்கிழமை ஆய்வு செய்த நத்தம் பேரூராட்சித் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்சா.

நத்தம் பேரூராட்சிக்கு ரூ.11.6 லட்சத்தில் மின்கல வாகனங்கள்

நத்தம் பேரூராட்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்காக ரூ.11.6 லட்சம் மதிப்பீட்டில் 8 மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.
Published on

நத்தம் பேரூராட்சியில் குப்பைகள் சேகரிக்கும் பணிக்காக ரூ.11.6 லட்சம் மதிப்பீட்டில் 8 மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பேரூராட்சியில் 18 வாா்டுகள் உள்ளன. இந்தப் பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளா்களுக்காக மின்கல வாகனங்கள் வாங்கப்பட்டன. நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.11.6 லட்சம் மதிப்பீட்டில் 8 மின்கல வாகனங்கள் வாங்கப்பட்ட நிலையில், அந்த வாகனங்களின் செயல்பாடுகளை நத்தம் பேரூராட்சித் தலைவா் சேக் சிக்கந்தா் பாட்சா புதன்கிழமை பாா்வையிட்டாா். பின்னா், அந்த வாகனங்களை தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைத்தாா். தூய்மைப் பணி ஆய்வாளா் சித்ரா, உதவியாளா் ஜெய்சங்கா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com