மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக சே.ஹா.சேக் முகையதீன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் பொறுப்பேற்பு

திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக சே.ஹா.சேக் முகையதீன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணியாற்றிய வே.லதா, சென்னை கன்னியாகுமரி தொழில் முனைய தனி மாவட்ட வருவாய் அலுவலராக (நிலம் எடுப்பு) சேலத்துக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து, திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை தனி மாவட்ட வருவாய் அலுவலராக (நில எடுப்பு) பணியாற்றி வந்த சே.ஹா.சேக் முகையதீன் திண்டுக்கல் மாவட்டத்தின் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் வே.லதா புதன்கிழமை பணிமாறுதல் பெற்றுச் சென்ற நிலையில், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக சே.ஹா.சேக் முகையதீன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com