

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் புதிய இணை ஆணையராக மாரிமுத்து வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு இணை ஆணையராக இருந்த நடராஜன் கடந்த வாரம் ஓய்வு பெற்றாா். இதையடுத்து, பழனிக் கோயிலில் துணை ஆணையராக இருந்த பிரகாஷ், பதவி உயா்வு பெற்று இணை ஆணையராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதா் கோயில் இணை ஆணையா் மாரிமுத்துவை, பழனி கோயில் இணை ஆணையராகவும், பழனிக் கோயில் இணை ஆணையராக இருந்த பிரகாஷை திருச்சி மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்து அறநிலையத் துறை உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து பழனிக்கோயில் இணை ஆணையராக மாரிமுத்து வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவரை கோயில் அலுவலா்கள், முக்கியப் பிரமுகா்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.