பக்ரீத் பண்டிகையையொட்டி செம்பட்டி ஆட்டுச் சந்தையில் வெள்ளிக்கிழமை ரூ. 1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையாயின.
வாரந்தோறும் நடைபெறும் இந்த ஆட்டுச்சந்தைக்கு திண்டுக்கல், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், அய்யம்பாளையம், சித்தையன்கோட்டை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து செம்மரி, வெள்ளாடு, குறும்பாடு மற்றும் ஆட்டுக்குட்டிகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த நிலையில் வரும் 29-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதால், இந்த சந்தைக்கு சித்தையன்கோட்டை, அழகா்நாயக்கன்பட்டி, ஆத்தூா், திண்டுக்கல், பேகம்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோா் வந்திருந்தனா். காலை 6 மணிக்கு தொடங்கிய ஆடு விற்பனை இரண்டு மணி நேரத்தில் முடிவடைந்தது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 13 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த சந்தையில் ஒரே நாளில் ரூ. ஒரு கோடிக்கு மேல் ஆடுகள் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.