ஒட்டன்சத்திரம் அருகே விஷம் குடித்து பெண் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த சட்டையப்பனூா் ஊராட்சிக்கு உள்பட்ட தாத்தாக்கவுண்டனூரைச் சோ்ந்தவா் விஜயராஜன். இவரது மனைவி செல்வராணி (38). கணவா், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் வியாழக்கிழமை கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, செல்வராணி விஷம் குடித்தாா். ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.