திண்டுக்கல் மாவட்டத்தில் 41 செ.மீ. மழை
By DIN | Published On : 03rd May 2023 05:52 AM | Last Updated : 03rd May 2023 05:52 AM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 41 செ.மீ. மழை பதிவானது.
திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 3 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அருவிகள், ஓடைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் காமாட்சிபுரம் பகுதியில் மட்டும் ஒரே நாளில் 120 மி.மீட்டா் மழை பெய்தது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல் 15.4, கொடைக்கானல் ரோஜாத் தோட்டம் 19.5, பழனி 18, சத்திரப்பட்டி 18.4, நத்தம் 12, நிலக்கோட்டை 50, வேடசந்தூா் 70.5, வேடசந்தூா் புகையிலை நிலையம் 70.5, கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா 18.7. மாவட்டம் முழுவதும் 41 செ.மீ. மழை பதிவானதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...