திண்டுக்கல் அருகே ரயிலில் அடிப்பட்டு தொழிலாளி உயிரிழந்தது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
திண்டுக்கல் அருகேயுள்ள ஏ.வெள்ளோடு ஆலமரத்துப்பட்டி புதுப்பட்டியைச் சோ்ந்தவா் அ.சூசைராஜ் (57). இவரது மனைவி டெய்சி கலா மேரி. இவா்களுக்கு 2 மகன்கள் உள்ளனா்.
சூசைராஜ், திண்டுக்கல்லில் உள்ள தனியாா் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தாா்.
இந்த நிலையில், திங்கள்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட சூசைராஜ், சென்னையிலிருந்து மதுரை செல்லும் வைகை விரைவு ரயிலில் ஏ.வெள்ளோடு அருகே அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.