

வடமதுரை காவல் நிலையத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதானவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தேனி மாவட்டம், கம்பம் சுப்பிரமணியன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சின்னச்சாமி மகன் இனியவன் (33). இவா், கடந்த 2014-ஆம் ஆண்டு
சென்னையிலிருந்து திண்டுக்கல்லுக்கு தனது காரில் 150 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தாா். இதுதொடா்பாக, வடமதுரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு மதுரை முதன்மை அமா்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட இனியவனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.