மதுக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு
By DIN | Published On : 19th May 2023 02:48 AM | Last Updated : 19th May 2023 02:48 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மதுக் கடைகள், மதுபானக் கூடங்களில் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள மதுக் கடைகள், மதுபானக் கூடங்களில் காவல் துணைக் கண்காணிப்பாளா் முருகேசன், வட்டாட்சியா் எம்.முத்துசாமி, மதுபானக் கடை வருவாய் ஆய்வாளா் முத்துசாமி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, மதுக் கடைகளில் போலி மதுபாட்டில்கள் விற்கப்படுகிா? அனுமதி பெறாமல் மதுபானக் கூடங்கள் செயல்படுகின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்தனா்.
அனுமதியின்றி செயல்படும் மதுபானக் கூடங்கள் பூட்டி சீல் வைக்கப்படும் என்றும், கள்ளச்சாராயம் விற்பவா்கள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனா்.