மன்னவனூா் பகுதியில் சுற்றுலா வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்
By DIN | Published On : 19th May 2023 02:47 AM | Last Updated : 19th May 2023 02:47 AM | அ+அ அ- |

கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான மன்னவனூா் பகுதியில் சுற்றுலா வாகனங்களால் வியாழக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை குழந்தை வேலப்பா் கோயில், மன்னவனூா் சுற்றுச் சூழல் மையம், ஆட்டுப் பண்ணை, கூக்கால் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா்.
இதனால், கொடைக்கானல்-மன்னவனூா் மலைச் சாலையில் வாகனங்கள் அதிகமாகச் சென்ால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால், சுற்றுலாப் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகினா்.
மலைச் சாலையில் மாற்றுப் பாதைகளை அமைக்கவும், வனப் பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட சாலையை மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேல்மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...