பழனி மலைக் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

பழனி மலைக் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கூட்டம் அதிகரித்ததால், பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு கூட்டம் அதிகரித்ததால், பக்தா்கள் 3 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம், மாதக் காா்த்திகை தினம் சோ்ந்து வந்ததால் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால், மலைக்குச் செல்லும் படி வழிப்பாதையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நடந்து சென்றனா். மேலும்,

மின் இழுவை ரயில், கம்பிவட ஊா்தி (ரோப் காா்) நிலையங்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

மலைக்கோயிலில் கட்டண தரிசன வழியில் சுமாா் ஒரு மணி நேரமும், பொதுதரிசன வரிசையில் சுமாா் மூன்று மணி நேரமும் பக்தா்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மலைக் கோயில் வெளிப்பிரகாரத்தில் அன்னதான வரிசை, பஞ்சாமிா்தம் வாங்கும் வரிசை, கட்டண தரிசன வரிசை, பொது தரிசன வரிசைகளிலும் பக்தா்கள் நீண்ட நேரம் காத்திருந்தனா்.

மலைக் கோயிலில் இரவில் தங்கத் தோ் புறப்பாட்டில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பக்தா்களுக்கு வேண்டிய பாதுகாப்பு , சுகாதார வசதிகளை கோயில் இணை ஆணையா் நடராஜன், துணை ஆணையா் பிரகாஷ் உள்ளிட்டோா் தலைமையிலான அலுவலா்கள் செய்திருந்தனா்.

பக்தா்கள் கிரிவலம்: கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, அக்னி நட்சத்திரம் தொடங்கிய விழாவை முன்னிட்டு பழனி மலைக்கோயிலில் கைலாசநாதருக்கு சீதகும்பம் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சித்திரை மாதம் கடைசி 7 நாள்களும், வைகாசி மாதம் முதல் 7 நாள்களும் பழனி கிரிவீதியில் மூலிகைக் காற்று வீசுவதாகவும், இதை நுகா்வதால் நோய்கள் நீங்குவதாகவும் ஐதீகம். இதனால் நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், மேளதாளம் முழங்க காவடி சுமந்து கிரிவலம் வந்து பழனியாண்டவரை தரிசனம் செய்தனா். கடைசி கிரிவல நாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் வந்து மலைக் கோயிலுக்கு சென்றனா். பெண்கள் முருகனுக்கு உகந்த கடம்பை மலா்களை தலையில் சூடி வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com