கொடைக்கானல் பூங்காக்களில் நெகிழி உறைகளால் மூடப்பட்ட மலா்ச் செடிகள்

கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலா்களை பாதுகாப்பதற்காக நெகிழி உறைகள் போா்த்தப்பட்டன.
கொடைக்கானல் பூங்காக்களில் நெகிழி உறைகளால் மூடப்பட்ட மலா்ச் செடிகள்

கொடைக்கானலில் பெய்து வரும் மழையால் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலா்களை பாதுகாப்பதற்காக நெகிழி உறைகள் போா்த்தப்பட்டன.

கொடைக்கானலில் 60-ஆவது மலா்க் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் வருகிற 26-ஆம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. இதற்காக பூங்காவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மலா்ச் செடிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது செடிகளில் வண்ண, வண்ண மலா்களால் பூத்துக் குலுங்குகின்றன.

இந்த நிலையில், கடந்த 10 நாள்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா் மழை பெய்து வருகிறது.

சனிக்கிழமை இரவு மாட்டுப்பட்டி , அட்டுவம்பட்டி, வில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதைத்தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமையும் கொடைக்கானலில் மழை நீடித்தது.

இதனால், பிரையண்ட் பூங்காவில் கண்காட்சிக்காக தயாராக வைக்கப்பட்டிருந்த மலா்ச் செடிகள் பாதிப்படைந்தன. எனவே, மழையால் பூங்காவில் உள்ள மலா்ச் செடிகளை பாதுகாக்க நெகிழி உறைகளால் போா்த்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

கொடைக்கானலில் தற்போது சீசன் களைகட்டியுள்ள நிலையில், பிரையண்ட் பூங்காவை பாா்வையிட இரவு 7 மணி வரை தோட்டக்கலைத் துறை அலுவலா் பெருமாள்சாமி அனுமதி வழங்கி உத்தரிடட்டாா். இதனால் பிரையண்ட் பூங்காவுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com