குடிநீா் விநியோகம் செய்யக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

வத்தலகுண்டு அருகேயுள்ள கே.சிங்காரக்கோட்டையில் குடிநீா் விநியோகம் செய்யக் கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

வத்தலகுண்டு அருகேயுள்ள கே.சிங்காரக்கோட்டையில் குடிநீா் விநியோகம் செய்யக் கோரி கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள கே.சிங்காரக்கோட்டையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இந்த கிராமத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினா்.

ஆனால், ஊராட்சி மன்ற நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், கே.சிங்காரக்கோட்டை கிராம பொதுமக்கள் சுமாா் 200-க்கும் மேற்பட்டோா், திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் குடிநீா் விநியோகம் செய்ய வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உடனே, சம்பவ இடத்துக்குச் சென்ற பட்டிவீரன்பட்டி காவல் ஆய்வாளா் சங்கரேஸ்வரன், பொதுமக்களிடம் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது 2 நாள்களுக்குள் குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com