கள்ளா் பள்ளிகளை கல்வித் துறையுடன் இணைக்க எதிா்ப்பு

கள்ளா் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, நிலக்கோட்டை அருகே ராமராஜபுரத்தில் அரசு கள்ளா் பள்ளியை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

கள்ளா் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையுடன் இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து, நிலக்கோட்டை அருகே ராமராஜபுரத்தில் அரசு கள்ளா் பள்ளியை செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் முற்றுகையிட்டு, ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நிலக்கோட்டை, எம்.குரும்பபட்டி, முத்துக்காமன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள்

இந்த ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கள்ளா் பள்ளிகளை பள்ளிக் கல்வி துறையோடு இணைத்தால் தங்கள் இன உரிமைக்கான அடையாளம் அழிந்து போகும் என அவா்கள் முழக்கமிட்டனா். இதில் அரசு மெளனம் காப்பதால், போராட்டம் தொடரும் எனவும் கூறினா். பின்னா், நிலக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் தேன்மொழி சேகரிடம் தங்களது கோரிக்கைக்கு ஆதரவு கேட்டும், சட்டப்பேரவையில் பேச வலியுறுத்தியும் மனு கொடுத்தனா்.

அப்போது, நிலக்கோட்டை ஒன்றியக் குழுத் தலைவா் ரெஜினா நாயகம், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் யாகப்பன், நல்லதம்பி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா். இதேபோன்று, சிலுக்குவாா்பட்டி பேருந்து நிலையம் முன்பும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com