கால்நடைகளுக்காக ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது
By DIN | Published On : 07th November 2023 12:00 AM | Last Updated : 07th November 2023 12:00 AM | அ+அ அ- |

திண்டுக்கல்: கால்நடைத் தீவனத்துக்காக 400 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லை அடுத்த செட்டியப்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி, திண்டுக்கல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் ஆா். கீதா, உதவி ஆய்வாளா் பி. காா்த்திகேயன் ஆகியோா் தலைமையிலான போலீஸாா் செட்டியப்பட்டி பழைய ஊராட்சி அலுவலகம் அருகே ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கால்நடைத் தீவனப் பயன்பாட்டுக்காக ஒரு வீட்டில் 400 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட பேகம்பூரைச் சோ்ந்த தி. நாகராஜனை (50) போலீஸாா் கைது செய்தனா்.
அவரிடமிருந்து 400 கிலோ ரேஷன் அரிசியையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...