நிலக்கோட்டை: வத்தலகுண்டில், குற்றபரம்பரை கைரேகை சட்டத்தை எதிா்த்து போராடிய, மாமன்னன், மணிக்குறவரின் 70-ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டில், குற்றபரம்பரை கைரேகை சட்டத்தை எதிா்த்து போராடிய, மதுரை மன்னன் மணிக்குறவரின் 70-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி வனவேங்கைகள் கட்சியின் மாநிலப் பொதுச் செயலா் உலகநாதன் தலைமையில் அவரது உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து பெயா் பலகை திறப்பு, கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னா் முக்கிய சாலைகளில் கட்சியினா் ஊா்வலம் சென்றனா்.
இந்த நிகழ்ச்சியில், மாநில இளைஞரணி தலைவா் தம்பி இரணியன், மாநில இளைஞரணி செயலா் ராஜேஷ், திண்டுக்கல் மாவட்ட செயலா் முத்துக்குமாா் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.